சூடான செய்திகள் 1

நாளை முதல் புகையிரத சேவைகள் வழமைக்கு

(UTV|COLOMBO) அனைத்து அலுவலக புகையிரத சேவைகளும் நாளை வழமை போன்று இடம்பெறும் என்று புகையிரத கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை இரவு தபால் புகையிரத சேவை நேற்று இடம்பெறவில்லை. பொலிஸ் ஊரடங்குச்சட்டம் நடைமுறையில் இருந்ததே இதற்குக் காரணமாகும். ஊரடங்குச்சட்டம் நீக்கப்பட்ட பின்னர் இரவு தபால் புகையிரத சேவை மேற்கொள்ளக்கூடியதாக இருக்குமென்று புகையிரத கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இருப்பினும், காலையில் இடம்பெறும் அனைத்து தூர இடங்களுக்கான புகையிரத சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் புகையிரத கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

27 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரட்டுக்களை கடத்தியவர்கள் கைது

340 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்…

கோட்டாபயவிற்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு