சூடான செய்திகள் 1

நாட்டின் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இன்று மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு அதிகம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

கொள்ளுப்பிட்டி அண்மித்த பகுதிகளில் கடும் வாகன நெரிசல்

நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

நிருவாக ஊழியர்களினால் லோட்டஸ் சுற்றுவட்டம் மூடப்பட்டுள்ளது