வகைப்படுத்தப்படாத

மருந்து ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு…

(UTV|CHINA) சீனாவில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான மருந்து ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆலையின் கீழ் தளத்தில் உள்ள எரிவாயு குழாய்களை சீரமைக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் திடீரென தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தீயில் சிக்கியும், புகையால் கடும் மூச்சு திணறல் ஏற்பட்டும் 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

 

 

Related posts

வடகொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனை

சர்வதேச வெசாக் தின வைபவம் ஆரம்பம்

‘Chaos’ as Hong Kong Police and protesters clash