சூடான செய்திகள் 1

இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியின் கொலன்னாவை அலுவலகம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு

கர்ப்பிணி தாய்மார் அல்லது பிரசவத்துக்கு பின்னர் தாய்மாருக்கு காய்ச்சல் – உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க அறிவுறுத்தல்

களுத்துறையில் நாளை 12 மணித்தியால நீர்வெட்டு