வகைப்படுத்தப்படாத

வணிக வளாகத்தில் தீ விபத்து – 2 பேர் உயிரிழப்பு…

(UTV|BANGKOK) தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பல அடுக்குமாடிகளை கொண்ட பிரமாண்ட வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் பலியானார்கள்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பல அடுக்குமாடிகளை கொண்ட பிரமாண்ட வணிக வளாகம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலை ஏராளமான வாடிக்கையாளர்கள் குவிந்திருந்தனர்.

அப்போது வணிக வளாகத்தின் 8-வது மாடியில் திடீரென தீப்பிடித்தது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்த மாடிகளுக்கும் தீ மளமளவென பரவியது.

இதற்கிடையில் தீவிபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஆனால் அதற்குள் தீயில் கருகி ஒருவர் பரிதாபமாக இறந்தார். மேலும் 17 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

 

 

 

 

Related posts

SLC announces 22-man squad for Bangladesh ODIs; Chandimal left out

மீண்டும் தலைதூக்கிய சைட்டம் பிரச்சினை

அமெரிக்காவைத் தாக்கிய பயங்கர சூறாவளி…