சூடான செய்திகள் 1

இன்றைய வானிலை…

(UTV|COLOMBO)  சப்ரகமுவ, தென், ஊவா, வடமேல், மற்றும் மேல் மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, ஊவா, மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாகாணங்களில் பலத்த மின்னல் தாக்கத்திற்கும் சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

அலுகோசு பதவிக்கு முதல் சுற்றில் தெரிவு செய்யப்பட்டவர்கள் வைத்திய பரிசோதனைக்கு

பத்தரமுல்லை பகுதியில் கடும் வாகன நெரிசல்

இன்று(16) பயண கட்டணங்களை குறைப்பது தொடர்பில் கலந்துரையாடல்