சூடான செய்திகள் 1

தென் மாகாண சபையின் பதவிக்காலம் ​நேற்று (10) நள்ளிரவுடன் நிறைவு…

(UTV|COLOMBO) தென் மாகாண சபையின் பதவிக்காலம் ​நேற்று (10) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது. தென் மாகாண சபையின் அதிகாரம் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோனின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதேவேளை, கிழக்கு, வட மத்திய, சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக்காலம் 2017 ஆம் ஆண்டு நிறைவடைந்ததுடன், வடமேல் மற்றும் வட மாகாண சபையின் பதவிக்காலம் 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் நிறைவடைந்தது.

அந்நிலையில், மேல் மாகாணத்தின் பதவிக்காலம் எதிர்வரும் 21 ஆம் திகதி நிறைவடையவுள்ளதுடன் ஊவா மாகாணத்தின் பதவிக்காலம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

 

Related posts

எதிர்வரும் 26 ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபடவுள்ள ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள்

பெசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் வரை ஒத்திவைப்பு

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 889 ஆக உயர்வு [UPDATE]