வகைப்படுத்தப்படாத

இஸ்ரேல் பொதுத் தேர்தலில் வெற்றியாளர் தொடர்பில் குழப்பம்…

(UTV|ISRAEL) இஸ்ரேல் பொது தேர்தலில், உறுதியான வெற்றியாளர் யார் என்பதில் தெளிவின்மை நிலவுவதாக கருத்து கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் பொதுத் தேர்தல் நேற்று நடைபெற்றதோடு இந்த தேர்தலில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு 5வது முறையாகவும், பிரதமர் பதவிக்காக போட்டியிடுகிறார்.
மேலும் அவரை எதிர்த்து இராணுவத் தளபதி பென்னி கான்ட்ஸ் போட்டியிடுகிறார்.
அந்தநிலையில், இருவருக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ தேர்தல் அறிவிப்புக்கள் இதுவரையில் வெளியாகவில்லை.
இருப்பினும் கருத்து கணிப்புக்களின் படி பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு 33 முதல் 36 ஆசனங்களையும், இராணுவத் தளபதி பென்னி கான்ட்ஸ் 36 அல்லது 37 ஆசனங்களை பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

980kg of beedi leaves found at Erambugodella

எந்தேரமுல்லை 02 ஆக மாறும் அக்பார் டவுன்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது