சூடான செய்திகள் 1

நாளை(09) சூரியன் உச்சம் கொடுக்கும் பகுதிகள்

(UTV|COLOMBO) நாளைய தினம் மஹவெவ, அலலுவ கந்தநுவர, கிராந்துருகோட்டை மற்றும் எல்லேகொட ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதனுடன் இன்று முற்பகல் 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலையாக 37.6 செல்சியஸ் வவுனியாவில் பதிவாகியுள்ளதுடன் குறைந்தபட்ச வெப்பநிலையாக 10.1 செல்சியஸ் நுவரெலிய மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

பிற்பகல் வேளையில் அதிகபட்ச வெப்பநிலை, அநுராதபுரம், யாழ்ப்பாணம், மஹஇலுப்பல்லம மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் பதிவாகியதுடன், அந்த பகுதிகளில் சாதாரண வெப்பநிலையை விட 3 செல்சியஸ் அதிகமாக காணப்பட்டதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

ஐ.தே.க பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்..!

இலங்கை விமானப்படைக்கு, இந்தியா வழங்கிய விமானம்!