விளையாட்டு

தாய் மண்ணில் வெற்றியை ருசித்த மும்பை இந்தியன்ஸ்!!

(UTV|INDIA) இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று இடம்பெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 37 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது

12ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 15வது போட்டியாக மும்பையில் நேற்றைய தினம் இந்தப் போட்டி இடம்பெற்றது

முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களை பெற்றது

மும்பை அணி சார்பில் சூர்யகுமார் யாதவ் 43 பந்துகளில் 59 ஓட்டங்களை அதிகூடுதல் ஓட்டங்களாக பெற்றுக் கொடுத்தார்

இதையடுத்து 171 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

Related posts

சாதனை படைத்த சமரி அத்தபத்து.

குமார் சங்ககார முதல் தரப் போட்டிகளில் இருந்து ஓய்வு

Kandy Warriors இனை தோற்கடித்த Jaffna Kings