சூடான செய்திகள் 1

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மே மாதம் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றினை முன்னெடுக்க தீர்மானம்

(UTV|COLOMBO) ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் எதிர்வரும் மே மாதம் 09 மற்றும் 10ம் திகதிகளில் சுகயீன விடுமுறையில் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

சம்பள முறைகேடுகள் உட்பட சில கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கபடுகின்றன.

கடந்த மார்ச் 13 ஆம் திகதி இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் மற்றும் அதிபர் சேவை சங்கத்தினர் சுகயீன விடுமுறையில் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்திருந்த போதிலும் இதுவரை அரசு சாதகமான தீர்வொன்றினை வழங்க வில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

வாகன விபத்தில் மூவர் மரணம்

ஏழாவது நாளாகவும் மனுக்கள் பரிசீலனைக்கு

உலகளவில் பலி எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது