வணிகம்

சிறுபோகத்தில் நெல் அறுவடைகளை உரிய காலத்தில் மேற்கொள்வதில் சிக்கல்…

(UTV|COLOMBO)  நிலவும் வரட்சியுடனான வானிலை காரணமாக விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் விவசாயிகள் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக, விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறுபோகத்தில் நெல் அறுவடை உள்ளிட்ட இடைக்கால பயிர் அறுவடைகளை உரிய காலத்தில் மேற்கொள்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த வரட்சியினால் ஒரு இலட்சம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேநேரம், வரட்சி காரணமாக பல பகுதிகளில் குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார் அத்துடன் நீர் தேவை காணப்படும் பகுதிகள் தொடர்பில் கிராம உத்தியோகத்தர்கள் அல்லது இடர் முகாமைத்துவ நிலையத்துக்கு அறிவிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Related posts

Oracle Cloud அப்ளிகேஷன் ஊடாக MillenniumIT ESP க்கு வலுவூட்டல்

பனங்கிழங்கு அறுவடை ஆரம்பம்

சீமெந்துக்கான அதிகூடிய சில்லறை விலை நிர்ணயம்