விளையாட்டு

திமுத் கருணாரத்னவிற்கு ஏற்பட்ட நிலை..

(UTV|COLOMBO) குடிபோதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணித்தலைவர் திமுத் கருணாரத்னவிற்கு
இலங்கை கிரிக்கட் நிறுவனம் 7500 அமெரிக்க டொலர்களை அபராதமாக விதித்துள்ளது.

இலங்கை கிரிக்கட் நிறுவனம் அறிக்கையொன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

குறித்த விபத்தில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பில் திமுத் கருணாரத்ன நேற்று நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த நிலையில் , அவரது சாரதி அனுமதி பத்திரத்தை ரத்துச் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2021 சீசனில் டோனி விளையாடுவார் – ஸ்ரீனிவாசன்

ஆர்ஜென்டினாவை வீழ்த்திய சவூதி அணியினருக்கு காத்திருந்த மகிழ்ச்சித் தகவல்

இந்தியாவிற்கு பயணிக்க பாகிஸ்தான் வீரர்களுக்கு ‘விசா’