சூடான செய்திகள் 1விளையாட்டு

திமுத் கருணாரத்னவின் சாரதி அனுமதி பத்திரம் இரத்து

(UTV|COLOMBO) மதுபோதையில் வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன இன்று(01) நீதிமன்ற பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று(01) நீதிமன்றத்தில் ஆஜரான திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை தற்காலிகமாக இரத்து செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று(01) அவரை புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு தெரிவித்து நேற்று(31) அவரை பொலிஸார் பிணையில் விடுதலை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொருவர் பலி [UPDATE]

தடயவியல் அறிக்கை – பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க தீர்மானம்

மது போதையில் வாகனம் செலுத்திய 4103 சாரதிகள் கைது