சூடான செய்திகள் 1

பொரள்ளை போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியை மோதிச் சென்ற நபர் பிணையில் விடுதலை

(UTV|COLOMBO) பொரள்ளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியை டிபென்டர் ரக வாகனத்தில் மோதிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

டிபென்டர் வாகனத்தை செலுத்திய ஓட்டுனரான நவிந்து ரத்னாயக்க என்பவரே இவ்வாறு 5 இலட்சம் ரூபா சரீர பிணைகள் இரண்டில் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் 8 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் அதில் ஏழு பேர், 5 இலட்சம் ரூபா சரீர பிணைகள் இரண்டில் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

 

 

 

 

 

Related posts

1000 CC இற்கு குறைவான வாகனங்களுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை

ஸ்ரீ.பொ.முன்னணியின் கூட்டத்திற்கு சென்ற சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை