சூடான செய்திகள் 1

கொழும்பில் பல பிரதேசங்களில் 24 மணி நேரம் நீர் வெட்டு…

(UTV|COLOMBO) மின்சார துண்டிப்பு மற்றும் அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக நாளை சனிக்கிழமை (30) காலை 9.00 மணி முதல் 24 மணி நேரம் கொழும்பு மாவட்டத்தில் பல பிரதேசங்களில் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை இதனை அறிவித்துள்ளது.

இதற்கமைய கொழும்பு, தெஹிவளை – கல்கிஸ்ஸை, கோட்டை, கடுவளை மாநாகர சபை அதிகார பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் கொலன்னாவ நகர சபை அதிகார பிரதேசங்களிலும் இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

இதனுடன் கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபை அதிகார பகுதிகள் மற்றும் இரத்மலானை மற்றும் சொய்சாபுர அடுக்குமாடி குடியிருப்பு பிரதேசங்களிலும் குறித்த காலப்பகுதியில் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடை வவுச்சர்களது கால எல்லை நீடிப்பு

நடமாடும் வங்கி கடன் சேவை

கட்டார் உட்பட 03 நாடுகளிலில் இருந்து இலங்கைக்கு வர தடை