வகைப்படுத்தப்படாத

செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தும் சோதனையில் இந்தியா சாதனை – மோடி அறிவிப்பு

(UTV|INDIA) விண்ணில் செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தும் ”மிஷன் சக்தி” சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக இந்திய பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

மேலும் இந்திய பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் மோடி ஊடகங்கள் மூலம் நாட்டு மக்களுடன் உரையாற்றிய போதே இவ்விடயத்தைக் கூறியுள்ளார்.

விண்வெளியில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா பெரிய நாடாக உயர்ந்துள்ளதாகவும் விண்வெளித் துறையில் இந்தியா வியத்தகு சாதனையை இன்று நிகழ்த்தியுள்ளதாகவும் இதன்போது மோடி குறிப்பிட்டுள்ளார்.

மிஷன் சக்தி என்ற பெயரில், விண்ணில் செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் சோதனை 3 நிமிடங்களில் வெற்றி பெற்றுள்ளதாகவும் மோடி தனது உரையின்போது அறிவித்துள்ளார்.

முற்றுமுழுதாக இந்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இது இந்தியாவின் செயற்கைக் கோளை பாதுகாக்கும் முயற்சிதானே தவிர, பிற நாடுகளுக்கு எதிரான சோதனை அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.

செயற்கைக்கோள்களைத் துல்லியமாக தாக்கி அழிக்கும் சக்தியை இந்தியா பெற்றுவிட்டது. இது நாட்டின் பாதுகாப்பிற்கு பலம் சேர்க்கும் எனவும் மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

 

 

Related posts

Light showers expected today

இன்று இலங்கை வரும் ஜப்பான் வௌிவிவகார அமைச்சர்

DMC says drought in 17 districts