சூடான செய்திகள் 1

குடு ரொஷானின் மனைவி “அருனி பபா” கைது

(UTV|COLOMBO) பாதாள உலக குழு உறுப்பினர் குடு ரொஷானின் மனைவி ´அருனி பபா´ மற்றும் ´தெல் சூட்டி´ ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

இதற்கமைய கிடைத்த தகவல் ஒன்றின்படி பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து போதைப் பொருள் மற்றும் 1.7 மில்லியன் ருபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

Related posts

ரணிலுக்கு அருகில் செல்ல வேண்டாம்-விமல்

திருகோணமலையில் திடீரென குவிக்கபட்ட இராணுவம்: பலத்த பாதுகாப்பு

புகையிரத சேவைகளில் தாமதம்