சூடான செய்திகள் 1

நதிமல் பெரேராவுடன் இன்னுமொருவர் தாயகத்திற்கு…

(UTV|COLOMBO) துபாயில் கைதான மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட குழுவினரில் இருந்த பாடகர் அமல் பெரேராவின் மகனான நதிமல் பெரேரா மற்றும் முன்னாள் சிறைச்சாலை ஆணையாளரான லலித் குமார ஆகியோரை அந்நாட்டு அரசாங்கம் நாடு கடத்தியுள்ளது.

நேற்று(26) இவ்வாறு இருவரும் நாடு கடத்தப்பட்டுள்ள நிலையில், இன்று(27) குறித்த இருவரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக இந்நாட்டிற்கு வருகை தந்திருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, விமான நிலையத்தில் குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு பொலிசாரினால் குறித்த இருவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்கு பின்னர் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்கபப்டும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

4,130 பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இன்று

இலங்கைக்கு 10 காவல்துறை வாகனங்களை வழங்கிய சீனா

நீர் விநியோகத் தடை!