வகைப்படுத்தப்படாத

ஈரான் வெள்ளத்தில் 19 பேர் உயிரிழப்பு

(UTV|IRAN) ஈரானில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதோடு  , 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானின் 31 மாகாணங்களில் 26 மாகாணங்களுக்கு வெள்ள எச்சரிகை விடுக்கப்பட்டுள்ளது. ஈரானின் ஃபார்ஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கிலேயே  18 பேர் பலியாகிள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் நாட்களில் பலத்த மழை பெய்ய உள்ளதால் ஈரானின் வடக்குப் பகுதியும் பாதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

 

Related posts

Showery and windy conditions to enhance until July 20

மும்பையில் கடும் மழை நீடிப்பு

Wellampitiya Factory employee in courts