வகைப்படுத்தப்படாத

இந்த ஆண்டிற்கான சிறந்த ஆசிரியர் “பீற்றர் தபசி”

(UTV|DUBAI) இந்த ஆண்டிற்கான சர்வதேச சிறந்த ஆசிரியர் விருதினை கென்யாவில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் தட்டிச்சென்றுள்ளார்.

டுபாயின் வார்க்கி குழுமத்தின் சார்பில் 5 ஆவது முறையாக வருடாந்த சர்வதேச அளவில் சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கும் விழா கடந்த சனிக்கிழமை அன்று டுபாயில் நடைபெற்றது.

இதனை ஹொலிவுட் நடிகர் ஹோக் ஜாக்மேன் தொகுத்து வழங்கினார்.

சிறந்த ஆசிரியரின் தேர்விற்கு கடின உழைப்பு, மாணவர்களின் திறன் மீது நம்பிக்கை, மற்றும் ஆசிரியர் பணியில் மிகுந்த ஆர்வம் உள்ளிட்டவற்றை காரணிகளாக கொண்டு தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம்.

அவ்வகையில் சிறந்த ஆசிரியருக்கான விருதினை கென்யாவைச் சேர்ந்த 36 வயதுடைய பீற்றர் தபசி என்ற ஆசிரியர் தட்டிச்சென்றார்.

இவர் கென்யாவின் வானி கிராமத்தில் உள்ள கெரிக்கோ மிக்ஸ்ட் டே பாடசாலையில் கணிதம் மற்றும் இயற்பியல் ஆகிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர் ஆவார்.

இவர் தனது சம்பளத்தின் 80 சதவீதத்தினை ஏழை குழந்தைகளின் கல்விக்கு செலவிடுகிறார். மாணவர்களிடையே கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், வறுமையில் இருந்து மீள்வது குறித்தும் பேசி, அவர்களிடையே கல்விகற்கும் ஆர்வத்தை உண்டாக்கி வருகிறார்.

 

 

 

Related posts

Hong Kong: Police and protesters clash on handover anniversary

பெண் அதிபரை முழந்தாளிட்டு மன்னிப்புக் கோர வைத்த சம்பவத்தைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம்

கனடாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி