கேளிக்கை

எனக்கான சரியான ஒருவரை நான் சந்தித்து விட்டால் உடனே திருமணம்

(UTV|INDIA) திரிஷா, நயன்தாரா, அனுஷ்கா பற்றி அடிக்கடி திருமண, காதல் கிசுகிசுக்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. நயன்தாரா இயக்குனர் விக்னேஷ்சிவனை காதலிக்கிறார். அனுஷ்கா பிரபாசை காதலிக்கிறார் என்று தகவல்கள் பரவினாலும் அதை அவர்கள் உறுதி செய்யவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பே திரிஷாவுக்கும் நடிகர் ராணாவுக்கும் காதல் என்று கிசுகிசு பரவியது. பின்னர் திரிஷாவுக்கு தயாரிப்பாளர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் அந்த திருமணத்தை சில காரணங்களால் ரத்து செய்துவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் திரிஷா.

இந்நிலையில் திருமணம் பற்றி அவரிடம் கேட்டபோது, ´இப்போதைக்கு நான் யாரையும் காதலிக்கவில்லை. ஆனால், எனக்கான சரியான ஒருவரை நான் சந்தித்து விட்டால் உடனே திருமணம் செய்துகொள்ள தயாராக இருக்கிறேன்´ என தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

2020 ஆண்டுக்கான National Crush இவர் தான்

படப்பிடிப்பில் வடிவேலு படுகாயம்?

படபிடிப்பில் படுகாயம் அடைந்த தன்ஷிகா