சூடான செய்திகள் 1

சில மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) சப்ரகமுவ, மத்திய, மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

வளிமண்டலவியல் திணைக்களம்

Related posts

நடப்பு ஆண்டுக்கான பட்டமளிப்பு நிகழ்வு

சிலி தலைநகருக்கு அவசர நிலை பிரகடனம்

பாராளுமன்ற தெரிவுக் குழு முன் ஜனாதிபதியை முன்னிலையாகுமாறு கோரிக்கை