வகைப்படுத்தப்படாத

படகு கவிழ்ந்ததில் 100 பேர் வரை உயிரிழப்பு…

(UTV|IRAQ) ஈராக் – மொசூல் நகரிலுள்ள ரைக்ரிஸ் எனும் நதியில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளனதில் அதில் பயணித்த 100 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அளவிற்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றமையே இந்த விபத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த விபத்தில் பெண்களும் குழந்தைகளுமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

100 க்கும் மேற்பட்ட பயணிகள் குறித்த படகில் பயணித்ததாகவும், அவர்கள் நீந்திக் கரையேறுவதற்கு முடியாமையாலேயே உயிரிழக்க நேரிட்டதாகவும் மொசூல் குடியியல் பாதுகாப்பு முகவரகம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

 

 

 

Related posts

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனா பயணம்?

තිරිඟු පිටි සඳහා රජයෙන් මිල සූත්‍රයක් ?

நிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்