கிசு கிசு

தாஜுடீனின் கொலை தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் வாய்திறந்தார்

(UTV|COLOMBO) சர்ச்சைக்குரிய றகர் வீரர் வஸீம் தாஜுதீன் கொலை தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தெரிவிக்கையில், வஸீம் தாஜுதீன் பயணித்த வாகனத்தின் வேகமானது கிலோமீட்டருக்கு 175 வேகத்தில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

அவ்வாறு பயணித்த வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகி உயிர்பிழைப்பது என்பது நைட் ரைடர்ஸ் ஆகத்தான் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

“எங்காவது விபத்து நடந்தால், குறித்த விபத்தில் பலியானாலும் அதற்கு காரணம் ராஜபக்ஷ தான்.. தாஜுதீன் தொடர்பில் பேசிய பேச்சுக்கள்.. நன்றாக தெரியும் இது ஒரு விபத்து என்று..

மணிக்கு 175 கிலோமீட்டர் வேகத்தில் வாகனம் மோதி வாகனத்தில் இருந்து பாய்ந்து உயிர்பிழைத்தால் அது நைட் ரைடர் ஆகத்தான் இருக்க வேண்டும்.. அதுதான் வேகம்.. வேகத்திற்கு மனிதனை கொலை செய்ய முடியும் என்றால்.. அதற்கு ராஜபக்ஷ பலியல்ல..”

என தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

Related posts

கார் கதவை தானே சாத்திய இளவரசி மேகன் மார்க்கல்…

தனஞ்சயவின் தந்தை படுகொலை : சந்தேக நபர் கைது

இலங்கையில் தாக்குதல்கள் ஏன்?