சூடான செய்திகள் 1

பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து

(UTV|COLOMBO) கிம்புலபிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று இந்த தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்ததுடன், நீர்கொழும்பு தீயணைப்புப் பிரிவினருடன் இணைந்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இந்த சம்பவத்தில் காயமடைந்த 2 ஊழியர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு மேலும் காயமடைந்த இருவரும் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Related posts

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக உயர்வு

118 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீளவும் 06ம் திகதி திறக்கப்படும்