வகைப்படுத்தப்படாத

இந்தோனேசியாவின் பபுவாவில் கடும் மழை-73 பேர் உயிரிழப்பு

(UTV|INDONESIA) இந்தோனேசியாவின் பபுவா மாகாணத்தில் பெய்து வரும் கனமழைக்கு 73 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பப்புவா மாகாணத்தில் கடந்த 09ம் திகதி முதல் பெய்த மழையால் நீர் நிலைகளில் வெள்ளப் பெருக்கு மற்றும் பல இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 73பேர் பலியாகி இருப்பதாகவும் 4000 பேர் பாதிக்கப்பட்டும் உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொரியாவில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா மகிழ்ச்சியுடன் வாய்ப்பளிக்க வேண்டும்

බුදුපුත් සුරක්ෂා හිමිකම් පත්‍ර ප්‍රදානය කිරීමේ වයඹ පළාත් මහෝත්සවය අද (13)

ஈரானில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்