சூடான செய்திகள் 1

இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களில் 16,17,18 ஆகிய தினங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் இன்று(16) இரவு நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஹம்பாந்தோட்டை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

 

 

 

Related posts

இலங்கை வரும் பொதுநலவாய நாடுகளின் செயலாளர் பட்ரீஷியா ஸ்கொட்லண்ட்

ஆறுகளின் நீர் மட்டம் உயர்வு மக்கள் அவதானத்துடன் இருக்குமாரு பணிப்பு

பிரதமர் பதவிக்கு தான் தகுதியானவன்-அமைச்சர் ஜோன் அமரதுங்க