வகைப்படுத்தப்படாத

பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பதவி விலகல்

பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக பணிபுரிந்த க்ரிஸ் காக்ஸ் அந்தப் பதவியிலிருந்து விலகுவதாக அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பேஸ்புக்கின் பல்வேறு பரிமாணங்களில் முக்கிய பங்குவகித்த அவர் அந்நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளான இன்ஸ்டகிராம், மெசஞ்சர், வாட்ஸ் அப் உள்ளிட்டவற்றையும் கவனித்துவந்தார்.

இந்நிலையில் பேஸ்புக் நிறுவனத்திலிருந்து விலகுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ள அவர்,பேஸ்புக் உடனான கடந்த 13 ஆண்டு கால பணியிலிருந்து விலகுவது வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts

உதயங்க வீரதுங்கவை அழைத்துவர ஏழு பேர் கொண்ட குழு டுபாய் பயணம்

புதிய அதி உயர் தன்மையைக் கொண்ட உந்துகணையை வெற்றிகரமாக பரீட்சித்துள்ள வட கொரியா

சலுகை விலையில் பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்களை அமைக்க அரசாங்கம் தீர்மானம்