சூடான செய்திகள் 1

வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் இரண்டாம் நாள் விவாதம் இன்று

(UTV|COLOMBO) 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பான குழுநிலை விவாதத்தின் இரண்டாம் நாள் விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சுப் பதவியை வகிக்கும், தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரம், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வட மாகாண அபிவிருத்தி, தொழில்பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் முதலான அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து இன்று விவாதிக்கப்படவுள்ளது.

அதேநேரம், ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீடு உட்பட நேற்றைய தினம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 23 நிதி ஒதுக்கீடுகள் திருத்தங்களின்றி, வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசியல்வாதி ஒருவர் அதிரடியாக கைது

editor

யாழ். பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பு