வகைப்படுத்தப்படாத

சீன அரசின் அதிரடி உத்தரவு…

(UTV|ETHIOPIA) எத்தியோப்பியா நாட்டு அரசுக்கு சொந்தமான ‘போயிங் 737 மேக்ஸ்-8’ விமானம், நேற்று காலை கென்யா நோக்கி புறப்பட்டு சென்றபோது சிறிது நேரத்தில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் பயணித்த 157 பேரும் உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக அதிகாரிகள் உயர்மட்ட விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில், ‘போயிங் 737 மேக்ஸ்-8’ ரக விமானங்கள் அனைத்தையும் உடனடியாக தரையிறக்கி, வர்த்தகரீதியிலான சேவையை நிறுத்தி வைக்கும்படி சீன அரசு உத்தரவிட்டுள்ளது. எத்தியோப்பிய விபத்தை சுட்டிக்காட்டி, பாதுகாப்பு கருதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

Related posts

இன்று கொழும்பில் விஷேட வாகனப் போக்குவரத்து நடவடிக்கை

தாதியை உயிருடன் எரித்து கொன்ற நோயாளி – பதறவைக்கும் சம்பவம்

பிரதமர் வடமராட்சி பகுதிக்கு விஜயம்