சூடான செய்திகள் 1

சேனா படைப்புழு தாக்கம் – 307 விவசாயிகளுக்கு நட்ட ஈடு

(UTV|COLOMBO) சேனா படைப்புழு தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் முதல்கட்ட வேலைத்திட்டம் நாளை(10) அம்பாறையில் ஆரம்பமாகவுள்ளது.

முழுமையாக பாதிக்கப்பட்ட 307 விவசாயிகளுகளுக்கு இதன்போது நட்டஈடு வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, பாதிப்புக்குள்ளான ஒரு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபா வீதம் நட்டஈடு வழங்கப்படவுள்ளதுடன் இதற்காக 16 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

முதற்கட்டமாக அம்பாறை, அனுராதபுரம், மொனராகலை மாவட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

விவசாய காப்பறுதி சபை, விவசாய திணைக்களம் மற்றும் விவசாய அபிவிருத்தி திணைக்களம் என்பன இணைந்து இதனை முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வற் அதிகரிப்பு: பணவீக்கம் 2 வீதத்தால் அதிகரிக்கும்

சர்வதேசத்தில் எரிபொருள் விலை குறைந்தால் அதன் பிரதிபலன் மக்களுக்கே

வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் காலம் இன்றுடன் நிறைவு