சூடான செய்திகள் 1

பெரும்பாலான மாகாணங்களில் மழை…

(UTV|COLOMBO) பெரும்பாலான மாகாணங்களில் இன்று மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் , காலி , மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில பிரதேசங்களில் பிற்பகல் நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் , ஊவா மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஓரளவு மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் பகுதிகளில் தற்காலிக கடும் காற்று வீசக்கூடும் என்பதுடன், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.

 

 

 

 

Related posts

விமல் வீரவங்ச மற்றும் ஜயந்த சமரவீர ஆகிய இருவரையும் உடனடியாக கைது செய்ய உத்தரவு

ஆழிப்பேரலையின் கோரத் தாண்டவம் ஏற்பட்டு இன்றோடு 15 வருடங்கள் [VIDEO]

ஹிருணிகாவை கைது செய்ய தேவையில்லை – மீளப்பெறப்பட்ட பிடியாணை!

editor