சூடான செய்திகள் 1

வெள்ளைவான் கடத்தல் சம்பவங்களுடன் தாம் ஈடுபடவில்லை…

(UTV|COLOMBO) மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் தாம் வெள்ளைவான் கடத்தல் சம்பவங்களுடன் ஈடுபடவில்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று(02) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

எனினும் யுத்தத்தில் வெற்றி கொள்ளும் விதமாகவும் அதனை முடிவுக்கு கொண்டு வரும் விதமாகவும் தாம் நுண்ணறிவான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவித்த அவர் மக்களை பாதிக்கும் எந்தவொரு செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான செயற்பாடுகள் மூலமாக 30 வருட காலமாக நாட்டில் இடம்பெற்ற போரை முடிவுக்கு கொண்டு வந்துள்ள மஹிந்த ராஜபக்ஷ அனைத்து மக்களும் மகிழ்ச்சியாக வாழும் சூழலை ஏற்படுத்தியுள்ளார் எனவும் கோத்தாபய ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.

 

 

 

Related posts

மழையுடனான வானிலை தொடரும் சாத்தியம்…

அமல் பெரேராவின் வீடு STF இனால் சோதனைக்கு

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்