விளையாட்டு

இலங்கை கிரிக்கட் முழு உறுப்புரிமையை மீண்டும் பெற்றது

(UTV|COLOMBO) சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) முழு உறுப்புரிமையை மீண்டும் இலங்கை பெற்றுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் சம்மி சில்வா ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு தெரிவித்துள்ளார்.

டுபாயில் தற்போது இடம்பெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விசேட கூட்டத்தில் இது தொடர்பில் அறிக்கையிடப்பட்டதாக அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் , கடந்த 09 மாதங்களுக்கு பின்னரே இலங்கைக்கு முழு உறுப்புரிமை கிடைத்துள்ளது.

உரிய காலத்தில் இலங்கை கிரிக்கெட் தேர்தல் இடம்பெறாமை காரணமாக இலங்கை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கண்காணிப்பு மட்டத்தில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரபல கால்பந்தாட்ட அணியின் முகாமையாளர் ஸ்பெயினிற்கு நன்கொடை

06’வது இடத்தினை பெற்ற கயந்திகா அபேரத்ன

SLC உப தலைவர் கே. மதிவாணன் இராஜினாமா