வணிகம்

வடக்கு கிழக்கில் முயற்சியான்மைகளை அதிகரிக்க நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறுதொழில் முயற்சியான்மைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி சுமார் ஆயிரத்து 785 சிறுமுயற்சியான்மைகள் அங்கு ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராம அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, தேசிய ஒருமைப்பாடு மற்றும் மறுசீரமப்பு அமைச்சின் செயலாளர் வீ.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தல் அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

Related posts

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு

தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 2,000 அதிசொகுசு பேரூந்துகள்