வகைப்படுத்தப்படாத

சோமாலியா-கார்குண்டு வெடித்ததில் 15 பேர் உயிரிழப்பு

(UTV|SOMALIA) சோமாலியா நாட்டில் கார்குண்டு வெடித்ததில் 15 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொகதிசு நகரில் உள்ள மக்கா அல் முக்காரமா என்ற சாலையில் வெடிகுண்டுகளை ஏற்றி கொண்டு கார் ஒன்று வந்ததுள்ளதாகவும் அது திடீரென வெடிக்க செய்யப்பட்டதாகவும்,இதில் 15 பேர் பலியாகியதோடு, 30 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த குண்டு வெடிப்பின் காரணமாக அங்குள்ள   ஓட்டல்கள், கடைகள் மற்றும் விடுதிகள்,அங்கிருந்த கட்டிடங்கள் மற்றும் 12க்கும் மேற்பட்ட கார்கள் தீயில் எரிந்து வருகின்றன.

மொகதிசு நகரில் வேறு இரு குண்டுவெடிப்பு சம்பவங்களும் நடந்துள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றது.

 

 

 

 

 

Related posts

මේ ආණ්ඩුව දේශපාලන පළි ගැනීම් කරන ආණ්ඩුවක් නෙමෙයි – ඇමති තලතා

ஸ்வீட் கார்லிக் சிக்கன் எப்படி செய்யலாம்?

வடக்கில் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது பணி பகிஸ்கரிப்பு