வகைப்படுத்தப்படாத

நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள 2ஆம் கட்ட பேச்சு வார்த்தை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜொங் யுன்னிக்கும் இடையில் நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள 2ஆம் கட்ட பேச்சு வார்த்தைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
இந்த பேச்சுவார்த்தைகள் வியட்னாம் தலைநகர் சைகொனில் நடைபெறவுள்ளது.

அந்த பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்ச்சியான அணு ஆயுத பரிசோதனையில் வடகொரியா ஈடுபட்டு வந்தமையினால், அமெரிக்காவுடன் முரண்பாடு ஏற்பட்டது.
இதன் விளைவாக வடகொரியா மீது அமெரிக்கா பாரிய பொருளாதார தடைகளை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, இந்த பிரச்சினையை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கும் நோக்கில், 8 மாதங்களுக்கு முன்னர், சிங்கபூரில் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கிம் ஜொங் யுன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடினர்.
அந்த சந்திப்பு, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக கருதப்பட்டது.
இந்தநிலையில், அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் வியட்நாமில் சந்திப்பு நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது.

Related posts

இன்று(18) அவுஸ்திரேலிய பொதுத் தேர்தல்

Special Traffic Division for Western Province – South soon

கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் கைது