கிசு கிசுசூடான செய்திகள் 1

அலுகோசு பதவிக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வது இன்றுடன் நிறைவு

(UTV|COLOMBO) மரண தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்காக வௌிநாட்டு பிரஜையொருவரை நியமிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அலுகோசு பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள போதிலும், கிடைத்துள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் வௌிநாட்டவரை அலுகோசு பதவிக்கு நியமிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அலுகோசு பதவிக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வது இன்றுடன் நிறைவடைவதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.

இன்று நண்பகல் 12 வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.

 

 

 

 

 

Related posts

அல் கொய்தாவை விட பயங்கரமானது ஹமாஸ்: ஜோ பைடன்

சோர்வான சவாலை வென்றுவிட்டோம்

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 295 ஆக அதிகரிப்பு