சூடான செய்திகள் 1

அதிகூடிய ஹெரோயின் போதைப் பொருள் தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) இலங்கை வரலாற்றில் பிடிக்கப்பட்ட அதிகூடிய ஹெரோயின் போதைப் பொருள் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 1ம் திகதிக்கு கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 2 சந்தர்ப்பங்களில் 336 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் தெஹிவளை பகுதியில் வைத்து மீட்கப்பட்டிருந்தன.
இதுதொடர்பில் பங்களாதேஸ் நாட்டில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டதுடன், இலங்கையிலும் பங்களாதேஸ் நாட்டவர்கள் உட்பட பலர் கைதாகி இருந்தனர்.
இந்த வழக்கு விசாரணையின் போது குறித்த போதைப் பொருள் வர்த்தகத்துக்கு பயன்படுத்தப்பட்ட தெஹிவளை பகுதியில் உள்ள வீட்டை அதன் உண்மையான உரிமையாளருக்கு வழங்கமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதாக, உரிமையாளர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ரமீஸ் பசீர் தெரிவித்துள்ளார்.

Related posts

இளவரசர், மிரெட் ராட் செயிட் அல் ஹூசைன் இன்று இலங்கைக்கு விஜயம்

ஐ.தே.க. மூன்று துண்டுகளாக உடையும்: பிரபல அரசியல்வாதி

படையினரை ஏற்றிச் சென்ற ஜீப் விபத்து – ஒருவர் பலி 8 பேர் காயம்