சூடான செய்திகள் 1

சட்டவிரோதமான முறையில் படகு மூலம் வெளிநாடு செல்ல இருந்த 12 பேர் கைது

(UTV|COLOMBO) சட்டவிரோதமான முறையில், படகு மூலம் வெளிநாட்டுக்குச் செல்வதற்காக, ​தங்கியிருந்த 12 பேரை, பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் நேற்று (14) கைது செய்துள்ளனர்.

திஸ்ஸமகாராம, பன்னகமுவ மற்றும் அளுத்கொட பிரதேசங்களில் உள்ள தங்கும் விடுதிகளில் ​தங்கியிருந்த போதே குறித்த நபர்கள் கைதாகியுள்ளனர்.

பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் கைது செய்த குறித்த குழுவினரை திஸ்ஸமகாராம பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், இன்று அவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.

 

 

 

 

Related posts

வெல்லம்பிட்டி செப்பு தொழிற்சாலையின் பணியாளர்கள் மீளவும் விளக்கமறியலில்

2 SJB MPக்கள் கட்சி தாவுவதை உறுதி செய்த SJB!

விகாரையில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுவன்