சூடான செய்திகள் 1

மரங்கள் வெட்டும் இயந்திர கருவிகள் பதிவு – 20 ஆம் திகதி ஆரம்பம்

(UTV|COLOMBO) மரங்கள் வெட்டும் இயந்திர கருவிகளை பதிவு செய்யும் நடவடிக்கை இம் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச, தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார் பாவனைக்கு பயன்படுத்தும் சகல இயந்திரங்களும் அருகாமையில் உள்ள பொலிஸ் நிலையங்களில் சமர்ப்பிக்கப்பட்டு, பதிவு அனுமதிப்பத்திரம் ஒன்றை கைவசம் வைத்திருக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மரங்கள் வெட்டும் இயந்திர கருவிகளை பதிவு செய்தலின் இறுதி தினம் எதிர்வரும் 28 ஆம் திகதி என பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.

 

 

 

Related posts

ஹெரோயினுடன் நபரொருவர் கைது…

உயர் தர மாணவர்களுக்கு டெப் வழங்க அமைச்சரவை அனுமதி

ஜனாதிபதி இன்று நேபாளத்திற்கு விஜயம்