சூடான செய்திகள் 1

சுற்றாடல் செயற்றிட்டத்தின் விசேட மாநாடு ஜனாதிபதி தலைமையில் இன்று

(UTV|COLOMBO) சுற்றாடல் பாதுகாப்புச் செயற்றிட்டத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அநுராதபுர மாவட்ட விசேட மாநாடு இன்று(14) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.

இம் மாநாட்டில் அநுராதபுர மாவட்ட மக்கள் முகம்கொடுக்கும் சுற்றாடல் பிரச்சினைகள் மற்றும் காட்டுயானை பிரச்சினை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது.

இதேவேளை, இம் மாநாட்டில் மகாசங்கத்தினர் உள்ளிட்ட சர்வ மதத் தலைவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் கலந்துகொள்ளவுள்ளதுடன், அவர்களினூடாக சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பில் மக்களை தெளிவூட்டுவதும் இம்மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.

 

 

 

 

Related posts

மாகல்கந்த சுதந்தர தேரர் உள்ளிட்ட நான்கு தேரர்களும் நீதிமன்றில் சரண்

ஹட்டன் செனன் கே.எம் டிவிசனில் நன்நீர் மீன் வளர்ப்பு திட்டம்

ஷானி அபேசேகரவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை