வகைப்படுத்தப்படாத

வங்கக் கடலில் நிலநடுக்கம்

(UTV|INDIA) வங்கக் கடலில் இன்று(12) ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சென்னையில் சில இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்னைக்கு வடகிழக்கே 609 கிமீ தொலைவில் கடல் மட்டத்தில் இருந்து 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவு கோலில் 4.9 அலகாக பதிவாகியிருந்ததாக தெரிவிக்கபப்டுகிறது.

நிலநடுக்கம் காரணமாக எந்த சேதமும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.

 

 

 

Related posts

North Korea fires ‘new short-range missile’ into sea, S Korea says

குழந்தைகளின் பொறாமை குணத்தை சரியான நேரத்தில் கண்டறியாவிட்டால் ஏற்படும் விளைவு

பிரேசிலில் கனமழை, வெள்ளத்துக்கு 9 பேர் உயிரிழப்பு