சூடான செய்திகள் 1

தாதியர் வெற்றிடங்கள் எதிர்வரும் ஜூன் மாதமளவில் நிரப்பப்படும்

(UTV|COLOMBO) எதிர்வரும் ஜூன் மாதம் 1500 தாதியர்கள் பயிற்சியை முடித்துக் கொண்டு வெளியேறவுள்ளனர். அவர்கள் வடக்கு – கிழக்கு வைத்தியசாலைகளில் இணைக்கப்படுவர் என சுகாதார இராஜங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

மகப்பேற்று நிபுணர்களுக்கு நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் பற்றாக்குறை நிலவுகிறது. வெளிநாட்டுப் பயிற்சிகளுக்காக ச் சென்ற மகப்பேறு நிபுணர்கள் இன்னும் வரவில்லை அதேபோல் 50 பேர் பயிற்சியில் உள்ளனர். அவர்கள் வெளியேறிய பின்னர் வெற்றிடங்கள் நிரப்பப்படும்.

 

 

 

 

Related posts

ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிப்பு

இஷாரா செவ்வந்தி தொடர்பில் தகவல் வழங்குபவருக்கு பரிசுத் தொகை வழங்கப்படும்

editor

மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு