வகைப்படுத்தப்படாத

டெல்லியில் கடும் பனிமூட்டம் – ரயில்களின் இயக்கம் தாமதம்

(UTV|INDIA) டெல்லியில் தொடர்ந்து வரும் கடும் பனிமூட்டம் காரணமாக காலை நேரங்களில் மக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர்.  வடமாநிலங்களில்  கடும் பனி நிலவி வருகிறது. விடியற்காலை நேரங்களில் பனி மூட்டம் அதிக அளவில் நிலவி வருவதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். அதுமட்டுமில்லாமல், சிறிது தொலைவு மட்டுமே சாலைகள் தெரிவதால் முகப்பு விளக்குகளை எரியவிட்ட படி  வாகன ஓட்டிகள்  செல்லும் நிலை உள்ளது.

இந்நிலையில், பனியின் தாக்கம் காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், இன்றும் டெல்லியில் 17 ரயில்களின் இயக்கம் தாமதமாக்கப்பட்டுள்ளது. மேற்கு உத்தர பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதேபோல் கிழக்குப்பகுதி மாநிலங்களான அசாம், மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் பனிமூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

 

 

 

 

Related posts

More rain in Sri Lanka likely

President says his life under threat

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!