சூடான செய்திகள் 1

மாகந்துர மதூஷ் உள்ளிட்ட குழுவினரை இராஜதந்திர ரீதியில் நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை

(UTV|COLOMBO) டுபாய் நாட்டில் கைது செய்யப்பட்ட பிரபல பாதாள உலக கும்பல் தலைவன் மாகந்துர மதூஷ் உள்ளிட்ட குழுவினரை நாட்டுக்கு கொண்டு வருவதற்காக இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸ் விஷடே அதிரடிப் படையின் கட்டளைத் தளபதி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எம். ஆர். லத்தீப் கூறியுள்ளார்.

இருநாட்டு அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின்னர் இந்நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கை வௌிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு தலையிட்டு அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் என்று சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எம். ஆர். லத்தீப் கூறியுள்ளார்.

 

 

 

Related posts

துப்பாக்கி சூடு நடத்திய நபர் கைது

‘Pick Me’ வாகன உரிமையாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்…

நாடு என்ற வகையில் முன்னோக்கி பயணிப்பதற்கு ஊடக சுதந்திரத்தைப் போன்றே ஊடகங்கள் பொறுப்புடன் செயற்படுவதும் முக்கியம்