சூடான செய்திகள் 1

தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் அமைதியின்மை

(UTV|COLOMBO) தேசிய ரூபவாஹினியின் சந்தைப்படுத்தல் பணிப்பாளரை நீக்குமாறு கோரி ரூபவாஹினி தலைவர் இனோகா சத்தியாங்கனியின் அலுவலக அறையை பணியாளர்கள் தற்போது சுற்றிவளைத்துள்ளனர்.

நீண்ட காலமாக பணியாளர்கள், சந்தைப்படுத்தல் பணிப்பாளரை நீக்குமாறு கோரி முன்வைத்த கோரிக்கையை புறக்கணித்தமை காரணமாக பிற்பகல் 1.30 மணியளவில் தலைவரின் அலுவலக அறையை சுற்றிவளைத்து இவ்வாறு ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகிறது.

குறித்த கோரிக்கையை முன்வைத்த ரூபவாஹினி தொழிற்சங்க உறுப்பினர்கள் 21 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டமையே ஆர்ப்பாட்டத்திற்கான பிரதான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதை சந்தைப்படுத்தல் பணிப்பாளர் அதிக சம்பளத்தின் கீழ் ரூபவாஹினிக்கு நியமிக்கப்பட்டுள்ள போதும், அவரால் நிறுவனம் வங்குரோத்து ஆகியுள்ளதாக பணியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

 

 

 

 

Related posts

பாடசாலைகளை ஒருவாரம் தாமதித்து ஆரம்பிக்குமாறு கோரிக்கை

மன்னார் எருக்கலம்பிட்டி, பாதைக்கு 18 கோடி ஒதுக்கீடு

டொலரின் பெறுமதியை குறைக்க விசேட திட்டம்…