சூடான செய்திகள் 1

தொழிற்சங்க நடவடிக்கையால் தேங்கியுள்ள கொள்கலன் பரிசோதனைகள் 3 நாட்களுக்குள் நிறைவு

(UTV|COLOMBO) சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கையால் தேங்கியுள்ள கொள்கலன்களைப் பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் 3 நாட்களுக்குள் நிறைவுசெய்யப்படும் என, சுங்க தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தமது கோரிக்கைக்கு அரசாங்கம் உரிய தீர்வு வழங்கியுள்ளதால் தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டதாக சுங்க அலுவலக அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் விபுல மினுவம்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தப் பணிப்புறக்கணிப்பு காரணமாக புறக்கோட்டையில் உள்ள சகல மொத்த வியாபார நிலையங்களும் நேற்று மூடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

தொழிற்சங்க நடவடிக்கையினால் 6,000க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக சுங்க அலுவலக அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் விபுல மினுவம்பிட்டிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

இரு மாடி கட்டிடத்தில் இன்று காலை தீ பரவல்

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிய தலைவர் நியமனம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடி மாற்றம்