வகைப்படுத்தப்படாத

ஜப்பானில் களைகட்டும் பனித் திருவிழா!

(UTV|JAPAN) ஜப்பானின் சப்போரோ பகுதியில் கொண்டாடப்படும் பனித்திருவிழாவை யொட்டி, உருவாக்கப்பட்டுள்ள பனிச்சிற்பங்கள் பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

குறித்த சப்போரோ பனித் திருவிழா, ஜப்பானின் வடக்கு பகுதியில் கொண்டாடப்படும் மிகவும் சிறப்பு வாய்ந்த குளிர்கால திருவிழா ஆகும்.

பெப்ரவரி மாதத்தில் 7 நாட்கள் தொடர்ந்து நடைபெறும், இவ்விழா இன்று தொடங்கி வரும் 11-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும். இதில்,ஆண்டுதோறும் சுமார் 2 மில்லியன் மக்கள் கலந்து கொள்வார்கள்.

பனித்திருவிழாவை யொட்டி, இந்த நகரத்தின் மூன்று பகுதிகளில் பனிச்சிற்பங்கள் பரவலாக அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சுமார் 200-க்கும் மேற்பட்ட பனிச்சிற்பங்கள் செய்யப்படுகின்றன.

புகழ்பெற்ற கார்ட்டூன்கள், மலைகள், கட்டிடங்களின் வடிவமைப்பு, பனிக்குகைகள், விளையாடும் சிறுவர்கள், குதிரை பந்தயம் போன்ற அமைப்பில் இந்த பனிச்சிற்பங்கள் உள்ளன.

 

 

 

 

 

 

 

 

Related posts

Showers likely in several areas today

දෙමළ ජාතික සන්ධානයේ නායකව රෝහල් ගත කරයි

Karunaratne won’t give up on Sri Lanka’s World Cup hopes